Best Asthma Remedy- ஆஸ்துமா நோயில் இருந்து விடுபட சிறந்த வழிகள்.

0
488

ஆஸ்துமா (மூச்சிரைப்பு நோய்)

ஆஸ்துமா

ஆஸ்துமா நோய் எம்மத்தியில் மிகப்பொதுவாக காணப்படுகிறது அத்தோடு இது 30 சிறுவர்களில் ஒருவருக்கு கானப்படுகின்றது ஆனால் இதன் அதிகரித்த போக்கினால் இதைவிட அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்படலாம் என்கிறது அண்மைய தரவுகள்.

அதிர்ஸ்ட்டவசமாகஇந்நோய் தற்போது காணப்படும் மருத்துவ முறைகளினால் சிறந்தகட்டுப்பாட்டுக்குள் பேணப்படக்கூடியது.

இது பொதுவாக சிறுவர்களிலேயே ஏற்படுகிறது பின் வளர்ந்த பிறகும் காணப்படலாம்.

ஆஸ்துமா என்றால் என்ன?

சுவாசக்குளாய்களின் (மூச்சுக்குளாய்களின்) வழி சுருங்குவதால் (குருகுவதால்) அல்லது அடைபடுவதால் ஏற்படும் சுவாசிக்க கஷ்டமான ஒரு நோய் நிலமை.

இங்கு தானாக அல்லது சிகிச்சையினால் சுருங்கிய அல்லது அடைப்பு ஏற்பட்ட மூச்சுக்குளாய்கள் மீண்டும் சாதாரன நிலைக்கு திரும்பக்கூடியது.

இது ஒரு நீண்ட கால நோய் ஆகும் (chronic disease).

இங்கு சுவாசக்குளாய்கள் குருகுவதற்கான அல்லது அடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன?

  1. மூச்சுக்குளாய்களின் சுவரில் உள்ள தசைகள் அசாதாரனமாக சுருங்குதல்.
  2. மூச்சுக்குளாய்களின் சுவரில் அழற்சி (infalamation)1 நிலமை ஏற்படுவதும், அவ்விடத்திற்கு அதிகமான கலங்கள் வேறு இடங்களில் இருந்து வந்து சேர்வதும்.

இதனால் மூச்சுக்குளாய்களின் சுவரின் தடிப்பு கூடுதல்.

  1. மூச்சுக்குளாய்களின் சுவர்களில் ஏற்படும் மேற்குறிப்பிட்ட மாற்றங்களினால் அவ்விடத்தில் அதிகமான,பசைத்தன்மையான சுரப்புகள் சுரந்து மூச்சுக்குளல்களின் துவாரத்தை மேலும் அடைத்தல்.

ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் என்ன?

மூச்சுவிடும் போது சத்தம்/ வீசிங்-wheezing.

நீண்ட நேரம்  தொடர்ச்சியாக இருமல் (இரவு நேரங்களிலும் காலை நேரங்களிலும் இருமல் அதிகமாக காணப்படல்).

மூச்செடுக்க கஷ்டம்.

நெஞ்சு இருக்கி பிடிப்பது போல் இருத்தல்.

எவ்வளவு காலத்துக்கொருமுறை இவ்வாரான அறிகுறிகள் தோன்றும்?

ஒவ்வொருவருக்கும் இது  வித்தியாசமாக காணப்படும்

சிலருக்கு  இவ்வாரான குணங்குறிகள் வருடத்துக்கொருமுறை அல்லது இரண்டுமுறை என தோன்றும்

சிலருக்கு வருடம் பூராக இடைக்கிடையே தோன்றும்.

ஒருமுறை ஆஸ்த்மாவின் அறிகுறிகள் தோன்றினால் எவ்வளவு காலத்திற்கு தொடர்ச்சியாக காணப்படும்?

இதுவும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது

சிலருக்கு இவ்வாரான அறிகுறிகள் தோன்றி பின் சில மணித்தியாலங்களில் அவர்கள் குணமடைந்து விடுவர்.

ஆனால் சிலருக்கு சில வாரங்கள் வரை தொடர்ச்சியாக இந்த அறிகுறிகள் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here