சர்க்கரை நோயின் அறிகுறிகள்

- சிறுநீரின் அளவு அதிகரிக்கும்-இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படும்.
- தாகம் கூடும்-அடிக்கடி நீர் அருந்த வேண்டி ஏற்படும்.
- உடல் நிறை குறையும்.
நோயாளிகள் 2-6 வாரங்கள் இந்த 3 பிரச்சனைகளும் காணப்பட்டதாக வைத்தியரிடம் செல்வர்.
மத்திய தர வயதில் உள்ளோர் இவ்வாறான பிரச்சினைகளை முகம் கொடுப்பர்.
சர்க்கரை நோயின் வேறு அறிகுறிகள்
சிலர் பல மாதங்கள் அல்லது வருடக்கணக்கில் மேலே உள்ள சிறு நீர் போக்கு அதிகரித்தல், தாகம் கூடுதல்,உடல் நிறை குறைதல் போன்ற பிரச்சனைகள் காணப்பட்ட போதிலும் வைத்தியரை நாடாமல் சோர்வுத்தண்மை,பார்வையில் மங்கள் தன்மை, பென் உறுப்பில் கடி(சொறிச்சல்) அல்லது ஆன் உறுப்பில் சொறிச்சல் போன்ற முறைப்பாடுகளுடன் வைத்தியரை நாடுவர்.
வயது முதிர்ந்தோரே அனேகமாக இவ்வாரு வைத்தியரை நாடுவோராவர்.

சிலருக்கு சர்க்கரை நோய் இருந்த போதும் அவர்களுக்கு சீனி நோயின் எவ்வித அறிகுறிகளும் இல்லாது சுக தேகி போல அவர்கள் காணப்படுவார்கள்.
இவ்வாரானவர்களுக்கு மெடிகல் செட்டிபிகேட்-medical certificate, வேறு விடயங்களுக்கான பரிசோதனைகளின் போது எதேர்ச்சையாக சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படும்.
சிறுநீரில் சர்க்கரை காணப்படுதல் எப்பொழுதும் சர்க்கரை நோயாக இருக்குமா?

சிறுநீரை பரிசோதிக்கும் போது சர்க்கரை காணப்படுதல் சீனி நோய் என்பதை எப்பொழுதும் சுட்டிக்காட்டாது ஆனால் அவ்வாறு சிறு நீரில் சர்க்கரை காணப்பட்டால் இரத்தப்பரிசோதனை செய்து சீனி நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்