சூரியனார் கோயில் The god who cares physical well-being.

0
557

சூரியனார் கோயில்

சூரியனார் கோயில்
சூரியனார் கோயில்

உலகத்து உயிர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, பலன்களை அவ் உயிர்களுக்கு அளிப்பவர்கள் சூரியன் முதலான நவக்கிரகங்கள்.

நவக்கிரகங்கள் தம்மை வழிபடுவோர்க்கு நற்பலனை மிகுதியாகவும், சாந்திசெய்து வழிபடுபவர்களுக்கு தீய பலன்களை குறைத்தும் வினைப்பயனை அனுபவிக்கச் செய்கிறார்கள். சிவபக்தர்களுக்கு எப்பொழுதும் நல்லனவற்றையே செய்பவர்களாக இருக்கிறார்கள்.

யார் இந்த சூரியனார்

பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.

உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக்கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார். அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.

சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர். அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.

சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.

சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தன்னிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு “சாயாதேவி” என்று பெயர் சூட்டினாள்.

தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், “நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் மூன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்“ என்று கூறினாள்.

அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, “சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.

தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.

அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

தென்னாட்டில் நவகிரகங்களுக்கெனத் தனிக் கோயிலாக விளங்குவது சூரியனார் கோயில் இத்jதலத்தில் அருள்மிகு சூரியனார் தலமூர்த்தியாக விளங்குகின்றார் இப்பெருமானைச்சுற்றி மற்றைய கிரகமூர்த்திகள் காட்சி அருளுகின்றார்கள்.

நவக்கிரக கோவில்களில் முதல் ஸ்தலமானது சூரியனார் கோவில் எனவே நவக்கிரக வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கள் தங்களது வேண்டுதல்கலையும் பூஜைகலையும் இத்திருதலாதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க…இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார். 

சூரியனார் கோயில் தல வரலாறு:

இதுவரை கிடைக்க பெற்ற கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 – கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலச்ங்களையும் உடையது.  இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன.

கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர்.  மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

 சூரியபகவானுக்கு உகந்தவை:

ராசி : சிம்ம ராசி

அதி தேவதை : அக்கினி

நிறம் : சிவப்பு

தானியம் : கோதுமை

வாகனம் : ஏழு குதிரை பூட்டிய தேர்

உலோகம் : தம்பாக்கு

மலர் : தாமரை

ரத்தினம் : மாணிக்கம்

ஸ்தல விருட்சம் : வெள்ளருக்கு

வழிபடும் முறை: 

சூரியனார் கோயில் நடை திறக்கப்படும் நேரம்:-

காலை 09 மணி முதல் 11 மணி வரை திறக்கட்டும். அதன் பிறகு மலை 4 மணி முதல் 8 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்

சிம்ம ரசிக்காரர்கள் வழிபடவேண்டிய ஸ்தலம்

அதிகாலையில் எழுந்திருக்கும் அனைவருக்கும் மிக அற்புதமான ஆற்றல் கிடைப்பதற்கு காரணம் அந்நேரத்தில் அவர்கள் பெறும் சூரியனின் ஒளியே காரணமாக இருக்கிறது.

சூரிய பகவானை தினமும் வழிபடுபவர்களுக்கு அனைத்து வல்வினைகளிலும் நீங்கும் என வேதங்கள் கூறுகின்றன. மேலும் யோககளை பயிலும் அனைவரும் முதலாவதாக சூர்யா நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் மற்ற ஆசனத்தை பழகுவார்கள்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன் என்ற பழமொழி சூர்யா நமஸ்காரதின் முக்கியத்துவதத்தை உணர்துகிறது. தன்னை வழிபடும் மனிதர்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் நவகிரக நாயகனாக சூரிய பகவான் இருக்கிறார். அப்படிபட்ட சூரிய பகவானை துதித்து பல பயன்களை பெறுவதற்கான ஆற்றல் மிகுந்த சூரியன் மூல மந்திரம்.

முதலில் சூரியனார் கோயிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.

சூரியனார் கோயில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.

மேலும் கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்

நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்

.தோஷ நிவர்த்தி  ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும்.

சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுவது மிகவும் சிறப்புடயதாக ஆமயும் இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோசங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்

மூலா மந்திரம்

பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்.

சூரியனார் கோயிலுக்கு எப்படி செல்வது?

இக் கோயில் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை சாலையில் தஞ்சாவூரில் இருந்து 58 கி.மீ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உண்டு மேலும் விழா கலங்க்காளில் சிறப்பு பேருந்து வசதிகள் உண்டு.

பேருந்தில் வருவோர் திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங்தூரம் நடந்து வந்தால் சூரியனார் கோயிலை அடையலாம்

      அருகில் இரயில் நிலையம் – ஆடுதுறை 2 கி.மீ தொலைவில்.

அருகில் உள்ள விமான நிலையம் – திருச்சி 123 கி.மீ தொலைவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here