சூரிய நமஸ்காரம் -The Ultimate Asana for the body as well mind

0
596

சூரிய நமஸ்காரம்

1.சூரிய நமஸ்காரம் (Surya Namaskar)

சூரிய நமஸ்காரம்  அல்லது சூரிய வணக்கமுறை என்பது இலக்கியம் மற்றும் பூரணங்கள் மூலம் “சூரியனுக்கு வணக்கம்” என்னும் காலை இறை வழிபாட்டு முறை நடைமுறையில் தொன்றுதொட்டு இருப்பது நாம் அறிந்த்து. சூரிய நமஸ்காரம் நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. சூரியனுக்கு வணக்கம் என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசைமுறையாகும். இது இந்து சூரியக் கடவுளின் வழிபாட்டில் இருந்து திரிந்து பிறந்ததாகும் மேலும் பல நாடுகளில் சூரிய கடவுளை வழிபடுகின்றனர்.

 2.சூரிய நமஸ்காரம் செய்ய சிறந்த நேரம்.

 சூரிய நமஸ்காரம்

1.அதிகாலையில் வெறும் வயிற்றுடன் அதாவது காலை கடமைகளைமுடித்த் பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. உடல் மன நலம், பெற, இந்த எளிய, ஆயினும் பயனுள்ள, சூரிய வணக்கத் தொகுப்பினைச் செய்யத் துவங்கலாம் காலை நேரம் காற்று சுத்தமாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.அதனால் ஆசனமோ தியானமோ, மூச்சு பயிற்சி செய்ய மனமும் உடலும் ஒத்துழைக்கும்.

2.சூரிய நமஸ்காரமானது பொதுவாக காலை அல்லது மாலை நேரத்தில் உணவு உட்கொண்ட இரண்டு அல்லது மூன்று மணி நேர இடைவேளிக்குப் பிறகு மட்டுமே செய்யப்பட வேண்டும்.

3.சூரிய நமஸ்காரங்கர பயிற்சிகளை வெறும் தரையில் செய்யாமல் விரிப்பில் செய்யவது சிறந்த பலன் அளிக்கும்

4. சூரிய நமஸ்காரங்கர பயிற்சிகளை செய்யும்போது மூச்சோட்டத்தையும் சரிவர செய்வது மிக சிறந்த பலன் அளிக்கும்.

5. சூரிய நமஸ்காரத்தில் தொடக்கத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்களை ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போது, மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். பீஜ மந்திரங்கள் ஆறு; சூரியனின் 12 பெயர்கள்  உச்சரித்து, ‘ஓம்’ சேர்த்து சத்தமாக உச்சரித்தபடியே இந்த சூரிய நமஸ்காரத்தை செய்வது, நம் மனதை தட்டி எழுப்புவதற்கும். மேலும் இந்த மந்திரங்களை சொல்வதன் மூலம் நமது மூச்சு காற்றை அடக்கி சூரிய நமஸ்கார பயிற்சி செய்ய எதுவாகும்.

6. சூரிய நமஸ்கார பயிற்சியின் இறுதியில் (ஓய்வு) அதாவது சவாசனத்தைச் செய்ய வேண்டும்.

7. சூரிய நமஸ்காரமானது சூரியன் உதிக்கும் அல்லது மறையும் திசையைப் பார்த்தே எப்போதும் செய்தல் வேண்டும்.அப்படி செய்யும் போதுதான் நமக்கு சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைக்கபெரும்.

8.பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. மேடு பள்ளம் இல்லாத தரையில் ஜமுக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை விரித்துப்போட்டு அதன் மேல் பயிற்சி செய்யவும், கட்டிலின் மீதோ, மெத்தையின் மீதோ இருந்து கொண்டு செய்யக்கூடாது.

9.சுத்தமான காற்று நிறைந்த தூய்மையான அறை யோகாப் பயிற்சிக்கு சிறந்தது. அந்த இடத்தில் உள்ள காற்றில் அதிக வெப்பமோ, குளிர்ச்சியோ இல்லாமல் இருக்கவேண்டும். மனதிற்கு அமைதி தரும் இயற்கை காட்சிகள் உள்ள பூந்தோட்டம் மற்றும் அருவி, நதி போன்ற நீர் நிலைகளின் கரைப்பகுதி போன்ற இடங்களில் பயிற்சி செய்ய வசதி இருந்தால் இன்னும் அதிகமான பயன் கிடைக்கும்.

3.சூரிய நமஸ்காரம் செய்யும் முறை மற்றும் மூச்சோட்டம் , உருவப்படங்கள்.

வ.என்ஆசனம் மூச்சோட்டம் உருவப்படங்கள்
1பிராணமாசனம்
(இறைவணக்கம் கைகுவித்த நிலை)
மூச்சை வெளியிடுதல்
2அஸ்த உட்டனாசனம்
(உயர்த்தப்பட்ட கைகள்ளுடன் பின்பக்ககமாக வளைதல்)
மூச்சை உள்ளிழுத்தல்2.jpg
3அஸ்தபாதாசனம்
(முன்னோக்கிய நிலையில் குனிந்த நிலை)
மூச்சை வெளியிடுதல்3.jpg
4அஸ்வ சஞ்சலாசனம்
(குதிரையேற்றம் போன்ற நிலை)
மூச்சை உள்ளிழுத்தல்4.jpg
5துவி பாத அஸ்வ சஞ்சலாசனம்
(நான்கு-கரங்கள் உள்ள பணியாளர் போன்ற நிலை)
மூச்சை வெளியிடுதல்5.jpg
6அஷ்டாங்க நமஸ்காரம்
(எட்டு கரங்களுடைய நிலையில் வணக்கம்)
தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்6.jpg
7புஜங்காசனம்
(நல்ல பாம்புவின் நிலை)
மூச்சை உள்ளிழுத்தல்7.jpg
8அத முக்த ஸ்வானாசனம்
(கீழ்முகம் பாக்கும் நாய்)
மூச்சை வெளியிடுதல்8.jpg
9அஸ்வ சஞ்ச்சலனாசனம்
(குதிரையேற்றம் போன்ற நிலை)
மூச்சை உள்ளிழுத்தல்9.jpg
10அஸ்தபாதாசனம்
(முன்புறம் வளைந்த நிலை)
மூச்சை வெளியிடுதல்10.jpg
11அஸ்த உட்டனாசனம்
(உயர்த்தப்பட்ட கைகள்ளுடன் பின்பக்ககமாக வளைதல்)
மூச்சை உள்ளிழுத்தல்11.jpg
12பிராணமாசனம்
(நேராக நிமிந்து நின்ற நிலை)
மூச்சை வெளியிடுதல்12.jpg

.

4.சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்யும் போது உச்சரிக்கப்படும் மந்திரங்கள்.
 1. ஓம் மித்ராய நமஹ
 2. ஓம் ரவயே நமஹ
 3. ஓம் சூர்யாய நமஹ
 4. ஓம் பானவே நமஹ
 5. ஓம் ககாய நமஹ
 6. ஓம் பூஷ்ணே நமஹ
 7. ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ
 8. ஓம் மரீசயே நமஹ
 9. ஓம் ஆதித்யாய நமஹ
 10. ஓம் சவித்ரே நமஹ
 11. ஓம் அர்க்காய நமஹ
 12. ஓம் பாஸ்கராய நமஹ

இவை அனைத்தும் சூர்யா தேவனுடய பல்வேறு திருநாமங்கள்.இந்த பெயர்களை உச்சரித்து வனங்க்க்குவதன் மூலம் நாம் சூர்யா பகவான் அருள் நமக்குகிட்டும்.

5.சூரிய நமஸ்காரம் செய்வதன் பயன்கள்

1.அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்

2.சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம். சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு.

3. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன

4.மேலும் உடலுறுப்புகள் உறுதி பெற்று காசநோயை தடுகக்கலாம்.
5.தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.

உடல் நலனைப் பெறுவதைத் தவிர, சூரிய நமஸ்கார் இந்தப் பூமியிலுள்ள உயிர்களை வாழவைக்கும் சூரியனுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஆகும். 12 சுற்றுக்கள் சூரிய நமஸ்காரம் செய்து  அதன் பின்,பிற யோகப் பயிற்சிகளைச் செய்து அதாவது நின்ற நிலை ஆசனம், அமர்ந்த நிலை ஆசனம், மல்லாந்த நிலை ஆசனம்,குப்புற நிலைஆசனம் என்ற நான்கு நிலை ஆசனங்க்களை செய்வதற்க்கு முன்பாக சூரிய நமஸ்காரம் செய்வது உடலினை எளிதாக முன்னும் பின்னும் வலைப்பதற்க்கு மிகவும் ஏதுவாக அமையும் பின்னர் யோகநித்ராவில் ஆழ்ந்த ஓய்வெடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு இது ஒரு தாரக மந்திரமாக விளங்குவதைக் காண்பீர்கள்.

இதுபோன்ற என்னற்ற பயன்கள் சூர்யநமஸ்காரம் செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கிறது

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here