சர்க்கரை வியாதி-Diabetes mellitus)

சீனி நோய் என்றால் என்ன?
எமது இரத்தத்தில் உள்ள சீனியின்(குளுகோசின்) அளவு சாதாரன அளவைவிட அதிகரிப்பதால் சிறுநீர் போக்கு அதிகரித்தலும்,கடும் தாகம் ஏற்படும் நிலையும் நீரிழிவு எனப்படும்.
ஆரோக்கியமான மனிதனில் சாதாரனமாக சீனியின் அளவு எவ்வளவு காணப்பட வேண்டும்?
100 மில்லிலீட்டர் இரத்தத்தில் சீனியின் அளவானது 63 மில்லிகிராம் தொடக்கம் 144 மில்லிகிராம் வரை காணப்பட முடியும்.
இதை இவ்வாரு குறிப்பிட முடியும் 63-144mg/dl
சர்க்கரை நோயுள்ளவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு எவ்வாறு காணப்படும்?
இரத்தத்தில் சீனியின் அளவு இரண்டு நிலைமைகளில் அளக்கப்படுகிறது
- 12 மனித்தியாலங்கள் (8 மணித்தியாலத்திற்கு மேல்) ஒருவரை எதுவுமே சாப்பிடாமல் இருக்க வைத்து விட்டு பின்னர் அவருடைய இரத்தத்தில் சீனியின் அளவை பரிசோத்தித்தல்.இங்கு ஒருவருடைய 100 மில்லிலீட்டர் இரத்தத்தில் சீனியின் அளவு 126 மில்லிகிராமிற்கு மேல் அதிகரித்து காணப்பட்டால் அதாவது 126mg/dL ஐ விட அதிகமாக கானப்பட்டால் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகம் என கூறுவோம்.
அல்லது
- எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அதாவது ஒருவரை சாப்பிடக்கூடாது என நிபந்தனை விதிக்காமல் அவருடைய இரத்தத்தை உடனடியாக பரிசோதிக்கும் போது அவருடைய 100 மில்லி லீட்டர் இரத்தத்தில் சீனியின் அளவு 200 மில்லிகிராம் ஐ விட அதிகமாக காணப்பட்டால் இங்கும் நாம் குறிப்பிட்ட நபருக்கு சீனிநோயை ஏற்படுத்தும் அளவுக்கு இரத்தத்தில் சீனியின் அளவு அதிகம் என கூறுவோம்.
ஆகவே சர்க்கரை வியாதி யுள்ளவர்களுக்கு இரத்தத்தில் சீனியின் அளவு
12 மணித்தியாலங்கள் சாப்பிடாமல் இருந்த பிறகு 126 மில்லி கிராமை விட அதிகமாகவும்எந்தநிலையில் அளவிடும்போதும் 200 மில்லிகிராமை விட அதிகமாகவும் காணப்படும்
இரத்தத்தில் சீனியின் அளவு மேல் குறிப்பிட்டதைவிட அதிகம் இருந்தால் சீனிநோய் என வைத்தியர் உறுத்திப்படுத்தி கூற முடியுமா?
இல்லை.
ஏன் என்றால் ஒருமுறை சீனியின் அளவு அதிகரித்தால் அந்த நபரை சீனிநோயாளி என குறிப்பிட முடியாது. இரண்டாவது தடவையும் அவருடைய இரத்தத்தை பரிசோதிக்க வேண்டும் அப்போதும் அவருடைய இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவை விட அதிகமாக காணப்பட்டால் அவரை சீனி நோயாளி என குறிப்பிட முடியும்.
சீனி நோயின் குணங்குறிகளுடன் வைத்தியரிடம் செல்லும்நோயாளிக்கு மேற்குறிப்பிட்ட படி இரண்டுமுறை இரத்தப்பரிசோதனை செய்ய வேண்டுமா?

இல்லை.
சீனி நோயின் அறிககுறிகளுடன் வைத்தியரிடம் செல்லும் ஒருவருக்கு இரத்த பரிசோதனை செய்யும் போது இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவை விட அதிகம் காணப்பட்டால் அவரை வைத்தியர் சீனி நோயாளி என குறிப்பிடுவார்.
எத்தனை வகையான நீரிழிவு காணப்படுகிறது?
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம்,யாருக்கு ஏற்படுகிறது என்பதை வைத்து நீரிழிவு நோய் பலவகையாக பிரிக்கப்படுகிறது.
முக்கியமானதாக
- வகை-2 நீரிழிவு- type-2 diabetes mellitus
- வகை-1 நீரிழிவு- type-1 diabetes mellitus
- கர்ப்பகால நீரிழிவு- gestational diabetes
அத்தோடு
- வெல்லமில்லாத நீரிழிவு- diabetes insipidus
இவை பற்றிய தெளிவுக்கு நீரிழிவின் வகை என்ற ஆக்கத்தை பார்க்கவும்.