நீரிழிவு நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள்

0
361

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயானது திடீர்என உடல் அங்கங்களில் பாதிப்புக்களையும் ஏற்படுத்தாத போதும் நீண்ட காலத்தில்  உடலின் பிரதான அங்கங்களை பாதிப்படையச்செய்து, செயலிலக்கச்செய்வதுடன் நோயாளியை மிகவும் கஷ்டப்படுத்தக்கூடியது.

இரண்டு பிரதான வழிகளில் நீரிழிவு நோய் எமது உடலை பாதிக்கிறது

  1. பெரிய இரத்தக்குளாய்களை பாதித்தல்.
  2. சிறிய இரத்தக்குளாய்களை பாதித்தல்.

உடம்பில் உள்ள அனைத்து அங்கங்களிலும் இரத்தக்குளாய்கள் முக்கிய இடத்தை  வகிக்கின்றன அவற்றிலேற்படும் பாதிப்பு குறித்த அங்கங்களை பாதித்து செயலிழக்கசெய்யக்கூடியது.

சிறிய இரத்தக்குளாய்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்.

  1. நீரிழிவு சிறுநீரக நோய்கள்-diabetic nephropathy பலவகையான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதனால் சிறுநீரகத்தை சிறிது சிறிதாக பாதித்து இறுதியில் சிறுநீரக செயலிழப்பை(kidney failure)ஏற்படுத்தும்.அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சிறுநீரக செயலிழப்புக்கான பிரதான காரணம்  இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஆகும்.
  2. நீரிழிவு நரம்பு நோய்கள்-diabetic neuropathy உடலின் பல பாகங்களில் உள்ள நரம்புகளை சிறிது சிறிதாக பாதித்து அதன் செயற்பாடுகளை இல்லாமலாக்கும்.இதனால் குறித்த நரம்புகள் தமது செயற்பாடுகளை இழக்கும் இவ்வாறு ஏற்படுவதால் சில இடங்களில் தொடுகை உணர்வு,வெப்ப,குளிர் உணர்வு,அமுக்க உணர்வு போன்றன இல்லாமல் போகும்   இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் உதாரணமாக ஒருவருடைய கால் நெருப்பினால் சுடுபட்ட போதும் அவருக்கு அது தெரியாது போகும் அவர் அந்த நெருப்பை விட்டு உடனடியாக காலைத்தூக்கும் செயற்பாடு இல்லாமல் போகும் அவர் அதை கண்களால் கண்டால் மாத்திரம் அவருக்கு அது தெரிய வரும்.தனியே சில நரம்புகளை செயலிழக்கச்செய்யும்(diabetic mononeuritis) இதனால் குறித்த நரம்பினால்  ஆற்றப்படும் தொழில் இல்லாமலாக்கப்படும் உதாரனமாக கண்களுக்குறிய நரம்புகள் பாதிக்கப்படுவதால் பார்வைகோளாருகள் ஏற்படும்.சில தன்னியக்க நரம்புகளை பாதிப்பதால்(autonomic neuropathy)அவற்றின் செயற்பாடுகள் இலக்கப்படுவதால் ஆண்மைக்குறைவு(impotence), குறிப்பாக இரவு நேரங்களில் வயிற்றோட்டம் ஏற்படும் இது குறிப்பிட்ட நோயாளியின் கட்டுப்பாட்டை மீறியும் வெளியேறும்,கடும் வாந்தி,திடீரென எழும்பும் போது மயக்கம்(postural hypotension) போன்றன ஏற்படலாம்.குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள தசைகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிப்படைவதால் அத்தசைகள் சுருங்கும்(diabetic amyotrophy)இதனால்  அப்பிரதேசம் சுருங்குவதோடு அப்பிரதேசத்தில் வலியும் காணப்படும் இது அனேகமாக வயதான நோயாளிகளுக்கே ஏற்படும்..
  3. நீரிழிவு விழித்திரை(கண்) நோய்கள்- சிறிது சிறிதாக பாதிப்பை ஏற்படுத்தி பார்வையிழப்பையும் ஏற்படுத்தும்.இளம் நீரிழிவு நோயாளர்கள் மூவரில் ஒருவருக்கு இந்த பார்வைக்கோளாருகள் ஏற்படுகிறது,30 வருட நீரிழிவு நோய்க்குப்பிறகு        5% மானவர்கள் பார்வை இழக்கிறார்கள்,65 வருடத்திற்குள் ஏற்படும் பார்வை இழப்புக்கான பிரதான காரணம் நீரிழிவு என்கின்றது இங்கிலாந்தின் தகவல்கள்

பெரிய இரத்தக்குளாய்களில் பாதிப்பைஏற்படுத்துவதால் உடலிலேற்படும் பாதிப்புகள்.

  1. இதய இரத்தக்குளாய் நோய்கள் இவ்வாறு இதயத்தின் இரத்தக்குளாய்களை பாதிப்பதால் நெஞ்சுவலி(angina),மார்படைப்பு(ஹார்ட் அட்டாக்-heart attack/myocardial infarction) போன்றன ஏற்படும் இதனால் மரணமும் ஏற்படலாம்.சாதாரன மனிதர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவது 3-5 மடங்கு அதிகம்.
  1. பக்கவாதம்1-மூளைக்கு செல்லும் இரத்தக்குளாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளையின் ஒரு குறித்த பகுதி இறக்கின்றது இதனால் அப்பகுதியால் கட்டுப்படுத்தப்படும் உடல் பாகம் செயலிழக்கின்றது இதுவே பக்கவாதம் அல்லது பாரிசவாதம் எனப்படுகிறது.
    இது நீரிழிவு நோயாளியில் ஏற்படுவது சாதாரன மனிதர்களை விட 2 மடங்கு அதிகமாகும்.
  2. சுற்றயல் இரத்தக்குளாய்களில் ஏற்படும்நோய்கள்- peripheral vascular disease இதனால் நடக்கும் போது கால்களில் வலிஏற்படும் ஓய்வு எடுக்கும் போது குறையும் பின் நடக்கும் போது மீண்டும் அந்த வலி ஏற்படும் (intermittent cludication) மற்றும் நீரிழிவுப்பாதம் எனும் ஒரு சிக்கலான சுகப்படுத்த கடினமான ஒரு நிலைக்கு நீரிழிவு நோயாளிகளின் பாதம் இட்டுச்செல்லப்படும்..பாதத்தை அகற்றும் சத்திரசிகிச்சை மூலம் பாதத்தை அகற்றுதல் சாதாரன மனிதர்களைவிட நீரிழிவு நோயாளிகளுக்கு 50 மடங்கு அதிகமாகும்.

இது தவிர வேறு சில பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.

உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி போன்ற நீர்ழிவுக்கேற்ற சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களினாலும் தொடர்ச்சியான வைத்திய சிகிச்சைகளினாலும் இப்பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்பட்டு எவ்வளவுகாலத்திற்கு பிறகு மேற்குறிப்பிடப்பட்ட இவ்வாறான பிரச்சினைகள் தோன்ற முடியும்?

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது இளம் நோயாளிகளில் நீரிழிவு நோய் கண்டு பிடிக்கப்பட்டு 10-20 வருடங்களுக்கு பின்னராகும் ஆனால் வயோதிபத்தில் புதிதாக நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்பட்டால்  இப்பிரச்சினைகள் 10 வருடங்களுக்கு முன்னரே தோன்றும் ஏனெனில் நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படுமுன்னரும் அவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படாமல் காணப்பட்டிருக்க முடியும்.

அத்தோடு நோயாளியின் கட்டுப்பாடும்,சிறந்த மருந்துப்பாவனையும் இவ்வாறான பிரச்சினைகள் விரைவாக தோன்றுவதைத்தடுக்கும்.

நோய்க்கட்டுப்பாட்டிலும்,மருந்துப்பாவனையிலும் ஒரு நீரிழிவு நோயாளி காட்டும் அசமந்தப்போக்கு அவருக்கு மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை அவருக்கு விரைவாக கொண்டுவரும்.

அவ்வாறாயின் குறுகிய காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சினைகள் தோன்றாதா?

தோன்றும்.

அவ்வாறு தோன்றும் பிரச்சினைகள்

சீனியின் அளவு திடீர் என உடளுக்கு தேவையான அளவை குறைவடைதல் இது ஹைப்போகிளைசீமியா (hypoglysaemiya) எனப்படும். இது ஒரு அதிதீவிர நோய்நிலமை ஆகும்.சீனியின் அளவு மிக அதிகமாக கூடுதல் இது ஹைப்பர்கிளைசீமியா எனப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here