ரசமணி.2 Increase the power of concentration and will power and sharpens the mind.

0
437

ரசமணி பற்றி நமக்கு தெரியாத பல அபூர்வ உண்மைகளும்  ரகசியங்களை பற்றியும் இக்கட்டுரை முலம் கானளாம்.

ரசமணிபாதரசம், மெர்குரி, புதன், ரசம், சிவன், விந்து, சக்திமூலம், மூன்று நாடி மருத்துவன் என்றெல்லாம் பல பெயர்களில் பாதரசத்தை அழைப்பார்கள். ரசத்தை லிங்கமாகவும், மணியாகவும், தண்ணீரில் வைத்தும், வைத்தியத்திற்கும் பயன்படுத்துவர். தங்கத்தை பிரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.


ரசமணி வாதம், பித்தம், கபம் இவைகளை சீரமைக்கும்.


மனிதருக்கு மூன்று நாடிகள் உடலில் உள்ளது. வாதம், பித்தம், கபம் இவைகளாகும். இவைகளை சீரமைக்கும் பணி ரசமணி அல்லது பாதரசத்தால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளுக்கும் உண்டு. இதன் மகத்துவத்தைக் கொண்டு பல நோய்களை போக்கலாம்.

உடலில் நாடிகளை சுத்தப்படுத்துவதோடு கிருமிகளை நம் உடலில் அண்டவிடாது. ரசத்தை நேரிடையாக உடலில் அணிவதைவிட தண்ணீரில் வைத்து அந்த தண்ணீரைக்கொண்டு குளிப்பதன் மூலமாக வெகுவிரைவாக ஆரோக்கியம் மற்றும் நன்மைகளைப் பெறலாம்.


ரசத்தை கட்டித்தான் பயன்டுத்த வேண்டுமா அப்படியே பயன்படுத்தக்கூடாதா என பல கேள்விகள் மக்களிடையே உண்டு. இது நியாயமான கேள்விதான் பதில் அறிவீராக. சித்தர்கள் காலம் முதல் இன்றைய காலம் வரை பாதரசத்தை சுத்தம் செய்து கட்டியாக்கியே பயன்படுத்துகிறார்கள். காரணம் பல உண்டு. அதில் ஒரு சிலதை அறியுங்கள். சுத்தமான ரசம் வெப்பத்தில் ஆவியாகி மறைந்துவிடும். ரசத்தை அப்படியே வைத்து பயன்படுத்தலாம். ஆனால் சாதாரண வெப்ப காற்றில்கூட சிறிது சிறிதாக கண்ணுக்கு தெரியாமல் கரைந்து குறைந்துவிடும். அதனால் பலகாலம் வைத்து பயன்படுத்த முடியாது. மேலும் பாதரசம் எதனோடும் ஒட்டி நிற்காது. எனவே அங்கத்தில் படும்படி வைப்பதும், தண்ணீரில் வைத்து பயன்படுத்தி மீண்டும் தண்ணீரில் இருந்து ரசத்தை எடுப்பதும் சிரமமான விஷயம்.

 ரசமணி
ரச மாலைமேலும் ரசம் நேரிடையாக சுத்திகரிக்காமல் பயன்படுத்தினால் பாஷனமாகும் (விஷம்) இதுவே சுத்தப்படுத்தி பயன்படுத்தினால் அமிர்தமாகும். எனவே ரசத்தை சுத்திகரித்து சில மூலிகைகளால் விஷமுறிவு செய்து பயன்படுத்துவதே சிறந்தது. இதைத்தான் அக்காலம் முதல் செய்கிறார்கள். சில அபூர்வ மூலிகைகள் நம் உடலில் நோய் உண்டாகாகமல் காக்கிறது. சில மூலிகைகள் மனிதர் யாவருக்கும் கிரக கதிர்களை சமமாக்கி கிரக தோஷமின்றி பலனை பெற்றுத் தருகிறது. சில மூலிகைகள் எந்த மாந்திரீக கட்டுக்கும் அகப்படாமல் மனிதரை காக்கிறது. இதனால் திருஷ்டி, தோஷம், சாபம், தீயசக்தி என்ற பயமின்றி இருக்கலாம். சில மூலிகைகள் மனிதனின் வளத்திற்கு பயன்படுகிறது. சில மூலிகைகள் பஞ்சபூத சக்தியை உள்ளடக்கியுள்ளது. இதுபோன்ற நன்மை தரும் அபூர்வ சக்தி கொண்ட மூலிகைகளை ஒன்று திரட்டிய சித்தர்கள் பாதரசத்தை கருஊமத்தை மூலிகையாலும், எலுமிச்சை சாறாலும் சுத்தி செய்து விஷமுறிவு உண்டாக்கி பின்பு மேற்சொன்ன சக்திவாய்ந்த அபூர்வ மூலிகைகளை ஒன்று திரட்டி பாதரசத்தோடு சேர்த்து அறைப்பார்கள். இதனால் ஒரு ரசம் நவ (9) ரசமாக மாறும். ஒன்பது வகையான சக்திகளை மனிதனுக்கு கொடுக்கும்.


இந்திரியம் கட்டுதல், நாடி கட்டுதல், கிரகம் கட்டுதல், பஞ்சபூதம் கட்டுதல், நோய் கட்டுதல், தோஷம் கட்டுதல், விஷம் கட்டுதல், அஷ்டகர்ம கட்டு, அதிர்ஷ்ட கட்டு ஆகிய பணிகளை சிறப்பாக செய்கிறது. இவ்வாறு கட்டிய ரசத்தை மணியாக்கி தனக்கு சித்தியான மந்திரத்தை உரு செய்து அணிந்துகொள்ள சொல்வார்கள். இதனால் ரசத்தின் சக்தி மேலும் வலிமைபெறும்.

பழனியில் போகர் சித்தர் முருகன் சிலையை இவ்வாறே வடிவமைத்தார். நவ பாஷனம்கொண்டு வடிவமைத்ததாக கூறுவார்கள். அந்த முருகனின் மேல் பட்டு வரும் அபிஷேக தண்ணீரை அருந்தினால் நோய்கள் விலகும் என்று கேள்விபட்டிருப்பீர்கள். காரணம் அதிசய மூலிகை கட்டும் ரசமும் முக்கிய காரணம் ஆகும். (ஸ்ரீ முருகப்பெருமானின் அருளை இங்கே ஒப்பிடவேண்டாம்) ரசம் என்பதே இறைவன்தான் என்பதை அறிக.

தண்ணீரும், நெருப்பும், ஆகாயமும், காற்றும், பூமியும் ஆகிய பஞ்ச பூதங்கள் எப்படி இறைதன்மை பெற்றதோ அதைப்போல இந்த பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித உடலுக்கு தரக்கூடிய ஆறாவது முகம் சடாச்சரம், ஆறாவது பூதம், இந்த பாதரசம் ஆகும். ஆனால் தான் இதை வெளிப்படுத்த ஸ்ரீ முருகப்பெருமானின் சிலை வடித்து இதன் சக்தியை உலகறிய செய்தார் போகர் சித்தர். இன்றைக்கு ரசலிங்கமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆக ரசத்தை அப்படியே பயன்படுத்துவதைவிட கட்டியாக்கி பயன்படுத்துவதில்தான் முழுமையான பலன் உண்டு. நிறைய ரசத்தின் அற்புதங்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஒன்பது வகையான மணி அற்புத பலனை சுருக்கமாகக் கூறிவிட்டேன். அதிலேயே யாவும் அடங்கிவிட்டது.

மேலும் அறிக. இன்றைக்கு பல மூலிகைகள் மக்கள் அறிய முடியாமல் போனதால் ரசகட்டிற்கு ஒன்றிரண்டு மூலிகையைக் கொண்டு கட்டுகிறார்கள். ரசம் கட்டுதல் சில நாளில் உதிர்ந்து போவதும் இன்றைக்கு உண்டு. எனவே காரீயம் கலந்தும் கட்டுகிறார்கள். பாதரசத்தின் விலையேற்றம் காரணமாக வெறும் காரீயத்தால் உருட்டப்பட்ட மணி லிங்க வடிவத்தை ரசம் என்று விற்பதும் இன்றைக்கு நடக்கிறது. எது எப்படியோ நம் நம்பிக்கை ரசத்தின்மேல் பலமாக இருந்தால்தான் ஒரிஜினல் ரசம்கூட சிறப்பாக பணிபுரிவதை உணரமுடியும். இல்லையேல் சித்தர் கொடுத்த ரசமானாலும் அற்புதம் உணரமுடியாது. நம்பிக்கைகொண்டு சாதாரண கூழாங்கல்லை துளையிட்டு கயிறுபோட்டு கழுத்தில் கட்டிக்கொண்டாலும் அற்புதமாக நம் நம்பிக்கை பிரார்த்தனையை பலிதமாக்கித் தரும்.

எனவே மெய்யன்பர்களே தெய்வீகத்தைப் பொறுத்தவரை சில மூலத்தை ஆராயக்கூடாது. அதற்காக ஏமாறவும் கூடாது. மனதில் பட்டதோடு தொடர்புகொள்வது அவசியமாகும். நம்பிக்கைத்தான் கல்லையும் தெய்வமாக்குகிறது என்பதை மறக்கக்கூடாது. ஆனால் ரசம் இதில் சிறு வித்தியாசம் கொண்டது. நம்பினாலும் நம்பவில்லையென்றாலும் விஷமும் மருந்தும் வேலை செய்யும் அல்லவா அதைப்போல ரசம் நம்பிக்கை அற்றவர் அணிந்தாலும் ஓரளவாவது பலனை அளித்தே தீரும்.


ரசமணியை அணியும்முறை.


ரசமணியை கழுத்தில் கருப்பு அல்லது பச்சை வண்ண நூலில் கட்டி மார்புக்குழிவரை தொங்கவிட்டு கட்டிக்கொண்டால் இதயநோய் சுவாசநோய் வராது. தொழில் பலப்படும், உணர்வுகள் கட்டுப்படுத்தப்படும், தாம்பத்தியத்தின்போது ரசமணியை நாக்கின்கீழ் அதாவது உமிழ்நீர் சுரக்கும் இடம் அவ்விடத்தில் வைத்துக்கொண்டு உறவுகொள்ளும்போது நீண்ட நேரம் உறவுகொள்ளலாம். நாம்கூறும் மந்திரங்கள் பலமடையும். விஷபூச்சிகள் தீண்டாது. எதிரியும் நண்பனாவான். எவ்வழியிலாவது பணம் வந்த வண்ணம் இருக்கும். வாடிக்கையாளர்கள் கூடுவார்கள். கிரக கோளாறுகள் பாதிப்பைத் தராது. ரசமணி அணிவதால் முன்னோர் சாபமும் படிப்படியாக குறையும். தீய கதிர்வீச்சுகளை தடுத்து நம்மை காக்கும் ஆற்றல் பெற்றது.சித்தர்கள் போற்றிய ரசவாதம் போற்றுதலுக்குறியதாகும். அத்தனை சாஸ்த்திரத்தையும் மனிதர்களுக்கு கொடுத்துதவிய ஞானிகள் பாதரசத்தையும் வழிகாட்டினார்கள் ஏன் என்றால் அனைத்திலும் பாதுகாப்பு ரசத்தில் இருந்து கிடைப்பதே காரணமாகும். சூழ்ச்சும வித்தைகள் பல கொடுத்து உதவிய ஞானிகள் அதில் உச்சி மகுடமாக கண்டதே ரசவாதமாகும்.

மூலிகைகளால் சுத்திகரிக்கப்பட்டு அதன் உறுதி தன்மைக்காக காரீயம் கலந்தே கட்டப்பட்ட ரசம்  தற்ப்போது உள்ளது.  இந்த மணியை அணிந்தபின் தினசரி உங்களுக்குள் சில மாற்றங்கள் நல்லவிதமாக நடப்பதை உணரலாம். எந்த மதத்தினரும் பயன்படுத்தலாம்.


ரசமணியின் பயன்கள்


தீரா நோயால் பீடிக்கப்பட்டவர்களும் அணியலாம். அணிந்து நிவர்த்தி பெறலாம். நோய்க்கு அருமருந்து மனமும் நம்பிக்கையும் தான். அதைப்போல ரசமணி அணிந்துகொண்டு செய்யும் செயல்கள் பலமடைகிறது நல்ல முயற்சி, நல்ல செயல் இவைகளை செய்யும்போது அவை பலப்படும். தீய செயல்களை செய்தாலும் பலப்படும். எனவே தீயதை தவிர்ப்பீர். நம்பிக்கையுடன் மனதிருப்தியுடன் அணியுங்கள் பஞ்சபூதமும் வசியமாகும்.

எதிர்மறை சக்திகள் நம் உலகத்தில் எத்தனையோ எதிர்மறை ஆற்றல் கொண்ட சக்திகள் இருந்துதான் வருகின்றது. அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த ரசமணிகள் பெரிதும் பயன்படுகிறது. மற்றவர்கள் நமக்கு வைக்கும் பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும்

ரசமணி புதன் கிழமைகளில் வீரியமுடன் பலன் தரும். எனவே புதன்கிழமை தோறும் தண்ணீரில் ரசமணியை வைத்து அந்த தண்ணீரில் குளியல் செய்யவும். பிறகு ரசமணியை எடுத்து எப்பொழுதும் போல் அணிந்துகொள்ளலர்ம்.  அதிக கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களும், காமத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களும் ரசமணி அணிந்து பயன்பெறலாம்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.

ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையாளம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here