இந்த கட்டுரையில் ரமணர் ஆன்மீக வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார் என்பது பற்றி பார்ப்போம்.பகுதி-1

0
364

ரமணரின் சிறு வயது பருவம்.

நான் யார் என்ற கேள்வி தான் வெங்கட்ராமன் எனும் 11 வயது சிறுவனை ரமண மகரிஷியை மகானாக மாற்றியது உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஏன் பிறக்க வேண்டும் பின்பு ஏன் இழக்க வேண்டும். மரணத்திற்குப் பின் நாம் என்ன ஆகிறோம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா எனும் மிகச் சிக்கலான பல்வேறு கேள்விகளுக்கு பதிலை தேடி அடைந்தவர்களுக்கு எல்லாம் நான் யார் எனும் ஒற்றைக் கேள்வியை மட்டுமே பதிலாக அளித்தவர் ரமணர்.

16 வயதில் ரமணர்

யார் இந்த வெங்கட்டராமன் அவர் எப்படி அந்த சிறு வயதில் உலகம் போற்றும் மகான் ஆனார் என்பதை விவரிக்கிறது இன்றைய கதைகளி கதை 1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சிழி எனுமிடத்தில் சுந்தரம் ஐயர் மற்றும் அழகம்மை  தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் ரமணர். தந்தை வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டிருந்த காரணத்தல் திருச்சிழியில் அனைவருக்கும் பரிச்சயமானதக அவர்  குடும்பம் இருந்தது.  திருச்சிழியில்  உள்ள மன்னர் சேதுபதி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ராமனின் தந்தை சுந்தரம் ஐயர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

ரமணரின் பள்ளிப்பருவம்.

தந்தையின் மரணம் அந்த சிறு வயதில் ரமணரின் மனதில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தியது அத்துடன் வருமானமின்றி குடும்பமும் சிதறுண்டதல் தாய் அழகம்மை தன் அண்ணன் நாகசுவாமி சகிதம் மதுரையில் உள்ள சித்தப்பா சுப்பையர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார் ரமணர் அங்குள்ள அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார் அவர். குடும்பத்தை காப்பாற்ற அண்ணன் சுவாமிக்கு வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம்

 இதனால் தம்பி படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு கன்டிப்புடன் வளர்த்தான் நாதசுவாமி ஆனால் படிப்பில் ஆர்வம் இல்லை இதநாள் பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர்த்து நண்பர்களுடன் கபடி விளையாடுவது நீச்சலடிப்பது நண்பர்கள் யாரும் இல்லை என்றால் மீனாட்சி அம்மன் கோவில் உட்பட மதுரை மாநகர் முழுவதும் சுற்றித் திரிவது என்பது தான் அவரது பொழுதுபோக்கு.

 மிகவும் துடுக்காக இருந்ததால் சில நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டு பிரச்சனையை வீட்டு வாசல் வரை கொண்டுவந்து விடுவார் இதனால் எப்போதும் ராமணரைக் கடிந்துகொள்வார் அவரது அண்ணன் நாக சுவாமி இளம் வயதில் நன்றாக தூங்குகின்ற பழக்கம் உடையவர் அவர் ராமணர் தூங்கும் போது யாரேனும் அவரை தாக்கினாள் கூட தெரியாத அளவிற்கு தூங்கியதால் வீட்டில் இருப்பவர்கள் அவரை கும்பகர்ணன் என்றும் தூங்குமூஞ்சி  என்றும் பட்டப்பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள் படிப்பு சரியாக வராததால் எதக்கும் எதற்கும் லாயக்கற்றவர் மற்றும் அவர் குடும்பத்தினர் தூற்ற தொடங்கினர்

ரமருக்கு மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்.

 ஒருமுறை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அலமாரியில் இருந்த பெரிய புராணம் புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தான் ரமணர் அதன்  உரைநடையை புரிந்து கொள்ள அந்த சிறு வயதில் கடினமாக இருந்தாலும் அதன் உள்ளே இருந்த 63 நாயன்மார்களின் கதைகளை படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெரியபுராணத்தை திரும்பத் திரும்பப் படிக்கத் தொடங்கினார்.

அதில் அவருக்கு மிகவும் பிடித்த பகுதி கண்ணப்ப நாயனாரின் கதை திண்ணன் எனும் வேடன் பன்றிகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை நண்பர்களுடன் சேர்ந்து பங்கு போட்டுக் கொண்டிருந்தபோது மலை உச்சியில் இருந்த சிவலிங்கம் ஒன்றைக் கண்டான் பக்திமிகுதியில் தன் கையிலிருந்த பன்றி இறைச்சியை படையலாக வைத்து தன் தலையில் இருந்த மலர்களை சிவலிங்கத்திற்கு சூட்டி வழிபட்டான்.

மறுநாள் சிவாச்சாரியார் ஒருவர் வந்து பார்த்தபோது அதிர்தார் சிவலிங்கத்திற்கு மாமிசம் படைத்தவனை திட்டியபடியே அந்த இடத்தை சுத்தம் செய்தர். பின்னர் அங்கு வில்வ இலைகளை வைத்து பூஜை செய்து விட்டு கிளம்பினான் அவர் போனதும் அந்த இடத்திற்கு வந்த திண்ணன் இது என்ன இலைக் குப்பைகள் நான் படைத்த மாமிசம் எங்கே சிவன் சாப்பிட்டு விட்டாரா என எண்ணி மீண்டும் பன்றி இறைச்சியை வைத்து மாமிச படயள் படைத்தான் மறுபடியும் அது சிவாச்சாரியார் சுத்தம் செய்யப்பட்டு வில்வ இலை அர்ச்சனை தொடர்ந்து.

 நாள்தோறும் இது தொடர்ந்து கொண்டிருந்ததால் யார் மாமிச படைகளை வைப்பது என கண்டுபிடிக்க ஒரு நாள் அங்கே ஒளிந்து இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கு மாமிசத்துடன் திண்ணணும் வந்துசேர சிவலிங்கத்தின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் கசிந்தது இதை கண்டு பதறிய திண்ணன் கண்ணுக்கு கண்ணே மருந்து  என கையிலிருந்த கூரிய அம்பினால் தன் ஒரு கண்ணை குத்தி எடுத்து சிவலிங்கத்தில் ரத்தம் வரும் ஒரு கண்ணில் அப்பினார் அப்போது மறு கண்ணிலும் ரத்தம் வந்தது சற்றும் யோசிக்காத திண்ணன் தனது மற்றொரு கண்ணையும் குத்தி எடுக்க முயன்றான்

ரமணர் தன் தாயுடன்

ஆனால் குருடனான  பின் எப்படி சரியாக ரத்தம் வழியும் இடத்தில் கண்ணை பொருத்துவது என யோசித்தான் பின்பு சற்றும் தயங்காமல் தனது காலை சிவலிங்கத்தின் மீது வைத்து கண்ணை பொருத்தும் இடத்தில் கட்டைவிரலை அடையாளமாக வைத்துக் கொண்டார் பின்னர் தனது கண்ணை பெயர்த்து எடுக்க முயன்றபோது சிவலிங்கத்திலிருந்து ஒரு கை வெளிப்படு நில்லுகணப்பா என தடுத்தாகக் கூறப்படுகிறது சிவாச்சாரியார் கண் முன்னே இந்த அஅரங்கேறியது இதை கதையாக படித்ததும் ரமணர் மனதில் பல்வேறு எண்ண அலைகள்  வீசியது கடவுளுக்கு முன் எந்த ஜாதியும் இல்லை எந்த பேதமும் இல்லை இல்லை.

உண்மையான அன்பு யாரிடம் உள்ளதோ அவரே உயர்ந்தவர் வெரும் நாடகத்தனமான பூஜைகள் கடவுள் தேவையில்லை தன்னைத்தானே யார் அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ அவர் முன் தோன்றுவார் என நினைக்கத் தொடங்கினார் ரமணர் இதனால் தனக்கும் சிவனின் தரிசனம் வேண்டும் எனும் எண்ணம் அவரது மனதில் வேர்விட துவங்கியது பெரியபுராணத்தின் தாக்கம் தந்தையின் மரணம் தான் எதற்கும் லாயக்கற்ற என்ற அச்சம் போன்றவற்றால் தான் யார் எனும் கேள்வி 16 வயது சிறுவனான அவருக்கு தோன்றியது முதல் நான் யார் எனுகேள்விக்கு விடை அடுத்த பதிவில் மேலும் பயணிப்போம்…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here