Siddha medicine for viral fever நொச்சி குடிநீர்

0
389

1.நொச்சி குடிநீர் தயாரிக்கும் முறை.

நொச்சி குடிநீர் தமிழ் பாரம்பரிய, சித்த மருத்துவத்தில் உள்ள, 64 வகையான காய்ச்சல்களில்  கொரோனாவும்ஒன்றாகவே கருதப்படும். அந்த வகையில், கொரோனா வைரஸ் பாதிப்பை, ‘ஐயஜூரம், சந்நிபாத ஜூரம்’ என்று கணித்து சிகிச்சை அளிக்கலாம்.அதன்படி, ‘பிரம்மானந்த பைரவம், வசந்த குசுமாகரம், திரிதோடம்’ என, மூன்று வகையான சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை, தினசரி இரண்டு நேரம், தேனில் கலந்து நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.அதேபோல், கபஜூர குடிநீர் ‘விஷஜூர குடிநீர், நொச்சி குடிநீர்’ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, நோய் பாதிக்கப் பட்டோருக்கு, தினமும், 30 மில்லி அளவில் கொடுக்கலாம். எனினும், இந்த மருந்துகளுக்குரிய, முறையான மருத்துவ அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இந்த மருந்துகளை தவிர, இணையதளத்தில் உலா வரும் தவறான தகவல்கள், அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நிறுவனத்தின் இயக்குனர், மீனாகுமாரி வெளியிட்டுள்ளர்.

மேலும் கபாசுரகுடிநீர் அனைத்து நாட்டு மற்றும் ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

2.நொச்சி குடிநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்போம்.

தேவையான பொருட்கள்:

நொச்சி குடிநீர்
நொச்சி குடிநீர்

1.நொச்சி கொழுந்து ஒரு கைபிடி

2. மிளகு 5 அல்லது 6 மிளகு பொடிதித்து

3. பூண்டு 3 அல்லது 4 பல் சிறிது மசித்தது

4. கருப்பு வெற்றிலை 5 அல்லது 6 காம்பு நீக்கியது

இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நீரில் இட்டு இளந்தீயில் அரை லிட்டர் ஆக கொதிக்க வைதத்து 30 மிலி வீதம் காலை மாலை கொடுத்துவர விச காய்ச்சல் குளிர் சுரம்,  தலைவலி இவை குணமாகும்.

3.வென் நீருடன் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தல்

உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்கும் முறை ஒரு பழங்காலத்து தீர்வாகும். ஆனால் இன்றைய அறிவியலும் இதன் சிறப்பை விளக்க மறக்கவில்லை.

உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பது சவ்வூட்டு விளைவை உண்டாக்குகிறது, இதனால் தொண்டையில் இருந்து திரவம் ஈர்க்கப்படுகிறது. இது சளியை உடைத்து, எரிச்சலூட்டும் ஒவ்வாமை, பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை அகற்றுகிறது. இதனால் தொண்டை சுத்தமாகிறது. இது உங்கள் ஈறுகளில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் வளர்ச்சியைத் தடுக்கிறது.

4.உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் எற்படும் நன்மைகள்

உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில பின்வருமாறு.

தொண்டை வறட்சி, அழற்சி, சளி, சைனஸ் தொற்று போன்ற பாதிப்புகளை இயற்கையான முறையில் போக்க உதவுகிறது.

தொடர்ந்து உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பது ஈறுகளில் இரத்தம் வழிவது போன்ற பாதிப்பைக் குறைக்கிறது.

உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் வாயில் உள்ள அமில அளவு சமநிலை அடைகிறது, அதன் pH அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் பற்குழிகள் தடுக்கப்படுகின்றன.

வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் பூஞ்சை தொற்று பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.

​5.உப்பு நீர் கொண்டு எவ்வாறு கொப்பளிக்க முறை

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கலக்கவும். உங்கள் வாயில் சிறிதளவு நீரை ஊற்றி தலையை மேற்புறம் சாய்த்து தண்ணீர் தொண்டையில் நிற்கும்படி வைத்து 30 நொடிகள் கொப்பளிக்கவும். பிறகு வாயில் இருக்கும் நீரை சுழற்றி வாய் முழுவதும் பரவவிட்டு பின்பு துப்பிவிடவும். இதேமுறையை 5-7 தடவை பின்பற்றவும். நீங்கள் சளி மற்றும் தொண்டை வறட்சியால் பாதிக்கப்பட்டால் ஒரு நாளில் இரண்டு முறை உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்கவும்.

இதன் மூலம் வாய் தொற்று நோய் மற்றும் கொரொனா நோயும் காட்டுதலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here