அலர்ஜி

ஒவ்வாமை-அலர்ஜி (allergy….) தற்போது பலர் ஒவ்வாமை- அலெர்ஜி எனப்படும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது எமது உடலின் எதிர்ப்பு சக்தியானது சில சாதாரன பொருட்களை எதிரியாக பார்ப்பதனால் அவற்றுக்கெதிராக பல செயற்பாடுகள் உடம்பினுள் நடைபெறுவதால் ஏற்படும் குணம் குறிகளாகும்.
சிலருக்கு தூசு,சிலருக்கு உணவுகள்,சிலருக்கு மருந்துப்பொருட்கள்,என பல பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

மூக்கில் இருந்து தண்ணீர் வடிதல்,மூக்கு அரிப்பு,தும்மல்,தொண்டை அரிப்பு,கண்கள் கடித்தல், கண்களில் இருந்து நீர் வடிதல்,தோல் தடித்து சிவப்பாதல்,மூச்செடுக்க கஷ்டம் என்பன ஏற்பட்டு பின்னர் காய்ச்சல் போன்றவை தொடக்கம் மரணத்திற்கு இட்டுச்செல்லும் பிரச்சினைகள் வரை ஏற்படலாம். சாதாரன மூக்குக்கடி,மூக்கால் நீர்வடிதல்,தொண்டை கடித்தல் என்பவற்றை ஏற்படுத்தும் மூக்கழற்சி எனும் ஒவ்வாமை அமேரிக்காவில் மாத்திரம் 35.9 மில்லியன் மக்கள் அதாவது ஏறத்தால சனத்தொகையில் 11%த்தை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு ஏன் இவ்வாரு தும்மல் ஏற்படுகிறது என்று தெரியாமல் தும்மல் ஏற்படுகிறது ”நான் கிரந்தி சாப்பாடு சாப்பிடவுமில்லை ஆனாலும் தும்முகிறது” என்றால் பின்வரும் காரணமாயிருக்கலாம் தூசு, தூசியில் காணப்படும் ஓர் உயிரினம்(dust mites )தூசியில் வளரும் கண்களுக்கு தெரியாத பூச்சி),பங்கசுக்கள்(பூசனம்),மரங்களின் மகரந்த மணி போன்ற காரணங்களால் ஏற்படலாம். முதலில் உங்களுக்கு எது/எவை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என தெரிந்து கொள்ளல் வேண்டும்.அதிலிருந்து தவிர்ந்துகொள்ளலே இந்தநோய்க்கு சிறந்த சிகிச்சை ஆகும்.
அனேகமானோருக்கு தூசுக்கு ஒவ்வாமை ஏற்படும் ஒவ்வோருநாளும் நீங்கள் உங்கள் வீட்டுத்தரையை கூட்டி துப்பரவு செய்தாலும் கண்ணுக்கு தெரியாத தூசு துணிக்கைகள் கானப்படலாம் எனவே இவற்றை அகற்றுவதற்காக வாரத்தில்/இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது வீட்டு திண்ணையை கழுவுதல்/மொப்பரால் ஈரப்படுத்தி சுத்தப்படுத்தல் (கழுவும்போது கிருமிகொள்ளி பதார்த்தங்களை பயன்படுத்துவதும் சிறந்தது). தூசு பூச்சிகள் உங்களது கட்டில் மெத்தைகள்,கட்டில் விரிப்புகள், தலையனை உறைகள்,தலையனைகள் போன்றவற்றில் கானப்படும் ஒரு கண்ணுக்குத்தெரியாத உயிரினம் ஆகும் இதுவும் கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது நாம் ஏற்கனவே கூறியது போல பல குணம் குறிகளை தோற்றுவிக்கக் கூடியது.

அனேகமானோரது உடல் இந்தப்பிராணிக்கு ஒவ்வாமையை காட்டுகிறது மூக்குக் கடித்தல், தொண்டை சொறிதல்,தும்முதல்,மூக்கால் நீர் வடிதல் போன்றன,கண்களில் கடித்தல் நீர் வடிதல் போன்றன ஏற்படலாம்.மழைக்காலத்தில் ஈரலிப்பு தண்மை அதிகம் காணப்படுவதால் இவற்றின் பாதிப்பு அதிகமாக காணப்படும். இவற்றினால் ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்டில் மெத்தை உறை, தலையணை உறை, விரிப்புகளை வாரத்திற்கு 1 / 2 வாரங்களுக்கு ஒருமுறை கழுவுதல் கொதிநீரில் கழுவுதல் வேண்டும்). தடித்த விரிப்புகளை 2 மாதத்திற்கு ஒருமுறையாவது கழுவுதல். தலையனை மெத்தைகளை கழுவ முடியுமானால் கழுவுதல் / நன்கு வெயிலில் உலர்த்துதல் அல்லது இவற்றிற்கு உறை இடும் போது இவ்வுயிரினங்கள் வெளியேறாதவாறு வடிவமைக்கப்பட்ட உறைகள் உண்டு அவற்றை வாங்கி பாவித்தல்,கதிரை விரிப்புகளையும் அடிக்கடி கழுவுதல், பஞ்சு பொம்மைகளையும் கழுவமுடியுமானால் அடிக்கடி கழுவுதல்,ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் தரை விரிப்புகளை நன்கு கழுவுதல்.
கழுவி நீண்ட நாள் பாவிக்காமல் துனிமணிகளை அலுமாரிகளில் அடுக்கி வைக்கும் போது அவற்றினுள் பூச்சிகள், தூசு பூச்சிகள் வளராதவாறு பூச்சுக்குண்டுகள் (naphthalene mothbolls) வாசணை பொருற்களை வைத்து பாதுகாத்தல் வேண்டும். இது கரப்பான், வேறு பூச்சிகளின் மலங்கள் துனிமனிகளில் சேர்ந்து ஒவ்வாமை ஏற்படுவதையும் தடுக்கும். (அனைத்தையும் கழுவும் போது கொதிக்கும் சுடுநீரை ஊற்றி கழுவுதல் சிறந்தது)